சவூதி வர்த்தக உபரியானது 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் அதன் நிலைத்தன்மையைத் தக்க வைத்துள்ளது. புள்ளியியல் பொது ஆணையம் (GASTAT) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, 2022 டிசம்பரில் 44 பில்லியன் ரியாலாக இருந்த வர்த்தக உபரி, 2023 டிசம்பரில் 11.4 சதவீதம் குறைந்து 39 பில்லியன் ரியாலாக இருந்தது.
2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நான்காவது காலாண்டில் 348 பில்லியன் ரியால்களில் இருந்து 14.4 சதவீதம் சரிந்து 297.9 பில்லியன் ரியால்களாக வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் எண்ணெய் ஏற்றுமதி விகிதம் நான்காவது காலாண்டில் 79.3 சதவீதமாக இருந்து 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 76.1 சதவீதமாக உள்ளது.
எண்ணெய் அல்லாத ஏற்றுமதி 1.2 சதவீதம் சரிந்தது, அதே நேரத்தில் பெட்ரோ கெமிக்கல்களின் ஏற்றுமதி மதிப்பு 18 சதவீதம் சரிந்தது, இறக்குமதிகள் ஆண்டுக்கு 2.8 சதவீதம் உயர்ந்தன.
மறு ஏற்றுமதி உட்பட எண்ணெய் அல்லாத ஏற்றுமதி, 2023 நவம்பருடன் ஒப்பிடுகையில், 2023 டிசம்பரில் 12 சதவீதம் உயர்ந்து 26.5 பில்லியன் ரியால்களாக இருந்தது. மறு ஏற்றுமதி உட்பட எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகளின் மதிப்பு 17.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
2022 டிசம்பரில் 64.9 பில்லியன் ரியாலாக இருந்த சவூதியின் இறக்குமதிகள் டிசம்பரில் 7.1 சதவிகிதம் குறைந்து 60.4 பில்லியன் ரியாலாக உள்ளது. 2022 டிசம்பரில் 36.4 சதவீதமாக இருந்த மறுஏற்றுமதி உட்பட எண்ணெய் அல்லாத ஏற்றுமதியின் விகிதம் டிசம்பரில் 43.8 சதவீதத்தை எட்டியது. எண்ணெய் அல்லாத ஏற்றுமதி 12 சதவீதம் அதிகரித்துள்ளது.