சவூதி அரேபியாவின் கனிம வளத்தில் 25% வடக்கு எல்லைப் பகுதியில் உள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு சவூதி ரியால் 1.2 டிரில்லியன் என்றும் சுரங்க விவகாரங்களுக்கான தொழில் மற்றும் கனிம வளத்துறை துணை அமைச்சர் இன்ஜி.காலித் அல்-முதைஃபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சவூதி அரேபியா சவூதி ரியால் 120 பில்லியனுக்கும் அதிகமான உள்கட்டமைப்பில் முதலீடு செய்து திட்டங்களை வெற்றியடையச் செய்துள்ளது என்று அல்-முதைஃபர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பாஸ்பேட் இருப்பதன் மூலம் இப்பகுதியில் போட்டி நன்மைகள் அதிகம் என்றும், தோராயமாகச் சவூதி ரியால் 80 பில்லியன் மதிப்புள்ள பாஸ்பேட் 4 மற்றும் பாஸ்பேட் 5 திட்டங்களின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதில் சவூதி செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
2035 ஆம் ஆண்டு இறுதிக்குள் சவூதி ரியால் 220 பில்லியனைத் தாண்டும் உதிரிபாகங்கள் மற்றும் முதலீடுகளைக் கொண்ட நவீன தொழில்துறையை உருவாக்குவதற்கு வடக்கு எல்லைப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அடிப்படையாக இருக்கும் என்று அல்-முதைஃபர் கூறினார்.





