Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி அரேபியாவின் கடல்சார் ஆதரவுத் துறையை மேம்படுத்த ஜமீல் நிறுவனத்தில் பங்குகளை வாங்கும் பொது முதலீட்டு...

சவூதி அரேபியாவின் கடல்சார் ஆதரவுத் துறையை மேம்படுத்த ஜமீல் நிறுவனத்தில் பங்குகளை வாங்கும் பொது முதலீட்டு நிதியம்.

189
0

நாட்டின் முதன்மையான கடல் ஆதரவு நிறுவனங்களில் ஒன்றான,1977 இல் நிறுவப்பட்ட Zamil Offshore நிறுவனத்திடமிருந்து 40% பங்குகள் வாங்குவதை பொது முதலீட்டு நிதியம் (PIF) இறுதி செய்துள்ளது. இது அரேபிய வளைகுடாவில் 90 க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்டுள்ளது.

கடல் ஆதரவு சேவைகளுக்கான Zamil Offshore இன் மூலதனத் தளத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த முதலீடு அமைக்கப்பட்டுள்ளது. கடல் ஆதரவு சேவைகளின் தேவைக்கு ஏற்ப நிறுவனம் தனது சேவைகளை விரிவுபடுத்த உதவுகிறது மற்றும் கடற்படையை விரிவுபடுத்துகிறது.

நிறுவனம் ஜமில் மெர்மெய்ட் போன்ற கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. கடலுக்கு அடியில் உள்ள சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது, கடல் தளங்களின் பராமரிப்பு மற்றும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பொது முதலீட்டு நிதியத்தின் முதலீடு இந்த முக்கியமான துறையை மேம்படுத்தும் என்று PIF இன் MENA இன்வெஸ்ட்மென்ட்ஸ் போக்குவரத்து மற்றும் தளவாடத் தலைவர் Bakr AlMuhanna குறிப்பிட்டார்.

சவூதி அரேபியாவில் கடல்சார் திட்டங்களுக்கு ஆதரவாக Zamil Offshore இன் செயல்பாடுகளைப் பன்முகப்படுத்த, விரிவுப்படுத்தஇந்த முதலீட்டை ஒரு முக்கியமான படியாக Zamil Offshore இன் தலைவர் Tawfiq Al Zamil, எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!