நவம்பர் 9 முதல் 15 வரை நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 17,556 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11,219 பேர் குடியுரிமை முறையை மீறியதற்காகவும், 3,782 பேர் எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும், தொழிலாளர் சட்டங்களை மீறிய 2,555 நபர்களும்,756 பேர் சவூதிக்குள் எல்லையைக் கடக்க முயன்றபோதும் கைது செய்யப்பட்டனர். இதில் 60% ஏமனியர்கள், 38% எத்தியோப்பியர்கள் மற்றும் 2% பிற நாட்டினர்.
குற்றவாளிகளை அடைக்கலப்படுத்தியதற்காக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.மொத்தம் 51,089 பேர் விதிமுறைகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 44,145ஆண்கள் மற்றும் 6,944 பெண்கள் ஆவர்.
பயண ஆவணங்களைப் பெறுவதற்காக 43,975 நபர்களும், பயண முன்பதிவுகளை முடிக்க 1,860 நபர்களும் பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் 10,636 நபர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
குற்றவாளிக்குத் தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி வழங்குபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 1 மில்லியன் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.





