புள்ளிவிவரங்களுக்கான சவுதி பொது ஆணையம் (GASTAT) வெளியிட்ட அறிக்கைப்படி, சவூதியின் வேலையின்மை விகிதம் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 7.6% ஆகக் குறைந்துள்ளது, இது 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 7.8% ஆக இருந்தது.இது விஷன் 2030 இலக்கைத் தாண்டியதாகத் தொழிலாளர் சந்தை புல்லட்டின் கூறுகிறது.
சவூதி பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 14.2% ஆகவும், ஆண்களுக்கு 4.2% ஆகவும் குறைந்துள்ளது. சவூதி மற்றும் சவூதி அல்லாதவர்களின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3.5% ஆக நிலையானதாக உள்ளது.
2024 முதல் காலாண்டில் மொத்த சவுதிகளின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 51.4 சதவீதத்தை எட்டியது. சவுதி மற்றும் சவூதி அல்லாதவர்களின் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 67 சதவீதத்திலிருந்து 66 சதவீதத்தை எட்டியது.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சவுதி பெண்களின் பங்கேற்பு விகிதம் 35.8% ஆகவும், ஆண்களின் பங்கேற்பு விகிதம் 66.4% ஆகவும் உயர்ந்துள்ளதாகத் தொழிலாளர் சந்தை புல்லட்டின் காட்டுகிறது.