சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன் கிழமை வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சவூதி அரேபிய குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது.
மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், நீரோடைகள் போன்ற இடங்களில் நீந்துவது ஆபத்தாக முடியும் எனச் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். சமூக ஊடக தளங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றுமாறு குடிமைத் தற்காப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
சவூதியின் பெரும்பாலான பகுதிகள் லேசானது முதல் மிதமான மழையால் பாதிக்கப்படும் என்று இயக்குனரகம் கூறியுள்ளது.
இதில் மக்கா பகுதியில் உள்ள மைசன், ஆதம் மற்றும் அல்-அர்தியத் போன்ற குறிப்பிட்ட பகுதிகளும், ரியாத் பகுதியில் உள்ள ரியாத் நகரம், அல் மஜ்மா, தாடிக், மர்ராத், அல் காட், அல் ஜுல்பி, ஷக்ரா, ரூமா, ஹுரைமிலா போன்ற பகுதிகளும், வடக்கு எல்லைப் பகுதி, அல் ஜூஃப், கிழக்கு மாகாணம், ஆசிர், நஜ்ரான், ஜசான், ஹைல்y மற்றும் அல்-காசிம் ஆகிய பகுதிகளும் அடங்கும். தெற்கு அல்-பஹா பகுதி மிதமான மழையால் பாதிக்கப்படும் என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது.