சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை இடியுடன் கூடிய மழை தொடரும் எனச் சிவில் பாதுகாப்பு பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது.
மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், நீரோடைகள் போன்ற இடங்களில் நீந்துவது ஆபத்தாக முடியும் எனச் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். சமூக ஊடக தளங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றுமாறு குடிமைத் தற்காப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கா பகுதி மிதமானது முதல் கனமழையால் பாதிக்கப்படும் என்று இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மக்கா நகரம், தாயிப், அல்-ஜுமும், அல்-கமில், அல்-கோர்மா, தர்பா, ரனியா, அல்-மவியா, அல்லைத், குன்ஃபுதா, ஆதம், அல்-அர்தியத், மைசன் மற்றும் ரியாத் நகரம், ரூமா, அல்-கர்ஜ், அல்-முஸாஹ்மியா, அஃபிஃப், அல்-தவாத்மி, அல்-குவையா, அல்-சுல்பி, அல்-காட், ஷக்ரா, அல்-மஜ்மா, தாடிக், ஆகிய இடங்களிலும் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜித்தா, ராபிக் மற்றும் குலைஸ் உள்ளிட்ட மக்காவின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுவதாக இயக்குநரகம் சுட்டிக்காட்டியுள்ளது.





