Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவுதி அரேபியா புனித மக்காவில் சிறும்பான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் அமைச்சருடன் சமூக...

சவுதி அரேபியா புனித மக்காவில் சிறும்பான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் அமைச்சருடன் சமூக ஆர்வலரும் மற்றும் மனிதநேய பண்பாளரும் தொழிலதிபர் பதுருதீன் அப்துல் மஜீத் அவர்கள் சந்திப்பு.

531
0

சவுதி அரேபியாவில் மக்கா நகரத்திற்கு உம்ரா பயணமாக வந்த தமிழ்நாடு அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்களை, சமூக ஆர்வலரும் மற்றும் மனிதநேய பண்பாளரும் தொழிலதிபர் பதுருதீன் அப்துல்மஜீத் அவர்களும் உம்ரா சென்ற நிலையில் மக்காவில் சந்தித்தனர்

இந்த இனிய சந்திப்பில் முன்னதாக வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான சேவையைச் சிறப்பாகச் செயலாற்றிவரும் புலம்பெயர் தமிழர் நல வாரியத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு அமைச்சரிடத்தில் தமிழ்நாடு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு சமூக ஆர்வலர் பதுருதீன் அப்துல் மஜீத் அவர்கள் முக்கியமான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து

அதாவது முதலாவது

திமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து முஸ்லீம் கைதிகளையும் விடுதலை செய்வதாகவும், அறிஞர் அண்ணாதுரையின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வதாக நமது மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடும் 38 முஸ்லிம்களின் விடுதலையை நாங்கள் மீண்டும் வலியுறுத்தி, சமீபத்தில் வியாழக்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் வாடும் 37 முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இரண்டாவதாக

தமிழ்நாட்டில் ஹிஜாப் பிரச்சனைகள் தொடர்பான பல வழக்குகள் உள்ள நிலையில், ஹிஜாப் என்ற பெயரில் பாஜக ஊடுருவ முயற்சிக்கிறது, இஸ்லாத்தின் உரிமை மற்றும் நெறிமுறைகள் மீறுபவர்களுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பும் உறுதி செய்து, கல்வியில் ஹிஜாப் அணிய தடை இல்லை எனத் தமிழக அரசு கண்டிப்பான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

மூன்றாவதாக

நீட் விலக்கு என்பது திமுக வின் இலட்சிய வாக்குறுதியாகும் சட்டமன்றத்தில் இரண்டுமுறை தீர்மானம் நிறைவேற்றி அதில் அரசு சிறப்பாகச் செயலாற்றுகிறது இருந்தபோதிலும் கல்வி மாநில பட்டியலில் இல்லாத காரணத்தினால் நீட் மாணவர்களின் மருத்துவக்கனவு எதிர்காலம் பாதிப்புள்ளாகிறது மற்றும் உயிரிழப்பு அதிகமாகிறது எனவே திமுக அரசு இந்தியா கூட்டனியின் மூலம் நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் போராட்டத்தை முன்னெடுத்தி விலக்கு பெற வேண்டும் எனவும்

நான்காவதாக

கொடூரமான நாய்கள் மற்றும் மாடுகள் கட்டுப்பாடு இல்லாமல் தெருக்களில் அத்துமீறி நுழைந்து பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களைத் தாக்குவது, தமிழகத்தின் பல இடங்களில் பதிவாகியுள்ளதால், கால்நடை வளர்ப்போர், உரிய வயல்களில் கால்நடைகளை மேய்க்கவும், பொது இடங்களில் தெருக்களில் நுழையத் தடை விதிக்க வேண்டும், தவறினால், நகராட்சி ஆணையர் மற்றும் ஆலோசகர்களின் வீடுகளுக்குத் தெருநாய்களை பொதுமக்கள் அனுப்ப வேண்டும்.

இறுதியாக ஐந்ததாவதாக

வெளிநாடு வாழ் தமிழர்கள் சம்பாதிப்பதற்காகக் குடும்பம் நண்பர்கள், கொண்டாட்டங்கள், மகிழ்ச்சி மற்றும் துக்கம் போன்றவற்றில் இருந்து வாழ்க்கையை தியாகம் செய்கின்றனர், அவர்களில் பெரும்பாலான NRE’s பல வருடங்கள் வெளிநாட்டில் கழித்த தாயகம் திரும்பியதும், அவர்களின் அன்றாட செலவுகளை நிர்வகிப்பது, தொழில் அல்லது வருமானத்தை நிறுவுவது கடினமாக உள்ளதால் நமது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான ஓய்வூதியத்துடன் கூடிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினால், இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கே சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்

எனவும் இப்படிப்பட்ட திட்டத்தை முன்னெடுத்த பெருமை தமிழ்நாடு அரசையே சாரும் வகையில் நடைமுறைப்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் தனி கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அமைச்சர் அவர்களைச் சமூக ஆர்வலர் பதுருதீன் அப்துல் மஜீத் அவர்கள் கேட்டுக்கொண்ட நிலையில் அமைச்சர் செஞ்சிமஸ்தான் அவர்களும் இந்தக் கோரிக்கைக்களை நிச்சயமாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார் இந்நிலையில் பதுருதீன் அப்துல் மஜீத் அவர்களும் தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டு தாமும் இறைவனிடத்தில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துக்கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!