சவூதி அரேபியா இந்தக் கோடைக்காலத்தில் தனித்துவமான சாகசங்கள் நிறைந்த, அழகிய இயற்கை காட்சிககைக் கொண்ட கடற்கரைகளில், ஆடம்பரமான ஓய்வு விடுதிகள் மற்றும் வளமான கலாச்சாரப் பிண்ணனியில் கோடையைக் கொண்டாட உலக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் சலுகைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் மலைப்பாங்கான அசிர் மற்றும் தாயுஃப் பகுதிகள் கோடையில் குளிர்ந்த காலநிலையைக் கொண்டது, மேலும் பசுமையான மற்றும் துடிப்பான உள்ளூர் கலாச்சாரத்தைக் கொண்ட நகரம். கேபிள் கார் எனும் ரோப் கார் சவாரிகள், காட்டுப் பாதைகள், நேரடி சமையல் மற்றும் பாரம்பரிய பழப் பண்ணைகளில் இயற்கை மதிய உணவுகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளை அல்-சௌதா பூங்கா வழங்குகிறது. இங்குள்ள ஸ்ட்ராபெர்ரி பழப்பண்ணை மக்களின் மனதினைக் கவர்ந்தது. இங்குப் பலவகையான பறவைகள் மற்றும் மீன் வகைகள் மக்களைப் பரவசப்படுத்தும் என்றும் கோடையை கொண்டாட சிறந்த இடம் என்றும் அறிவித்துள்ளது.
“ரோஜாக்களின் நகரம்” என்று அழைக்கப்படும் தாயுஃப், சரவத் மலைகளில் உள்ள ஒரு அழகிய இடமாகும். சுற்றுலாப் பயணிகள் அல்-ஷரீஃப் அருங்காட்சியகத்தைக் கண்டு வியக்கலாம். இது ரோஜாக்களின் வாசனையுடன் காற்றை நறுமணப்படுத்தும் ரோஸ் வாட்டர் மற்றும் எண்ணெய் உற்பத்திக்குப் பெயர் பெற்றது.
நீருக்கடியில் டைவிங் சாகசங்கள் முதல் ஆடம்பர Squba divig மற்றும் கடலில் யோகா அமர்வுகள் போன்ற அனைத்தையும் புதிய ஓய்வு விடுதிகளான Six Senses Southern Dunes மற்றும் The St. Regis Red Sea Resort வழங்குகிறது எனத் தெரிவித்துள்ள்து.
பண்டைய மற்றும் நவீன கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற சவுதி அரேபியா, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு மையமாக மாறி வருகிறது. மேலும் ரியாத் இ-ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது என்றும் கூறி கோடையை கொண்டாட சவூதி அரசு அழைப்பு விடுத்துள்ளது.