மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நவம்பர் 2017 இல் தொடங்கப்பட்ட உழைக்கும் சவூதி பெண்களுக்கான குழந்தை பராமரிப்பு (குர்ரா) திட்டத்தின் மூலம் செப்டம்பர் 2023 வரை 25,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளதாகவும், திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் SR1600 ஒதுக்கீடு செய்து சவுதி பெண் ஊழியர்களுக்குக் குர்ரா ஆதரவளிதுள்ளாதகவும் மனிதவள மேம்பாட்டு நிதியம் (HADAF) அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விருந்தோம்பல் சேவைகளை வழங்குவதற்கான மையங்களின் எண்ணிக்கை சவூதியின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ள சுமார் 1,200 விருந்தோம்பல் மையங்களையும், மேலும் திட்டத்தால் பயனடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 26,750 குழந்தைகளையும் எட்டியுள்ளது.
குர்ரா தளம் மூலம் புதிதாகப் பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான குழந்தைகளைப் பராமரிப்பதற்கான செலவில் 50 சதவிகிதம் வரை ஒரு குழந்தைக்கு SR1600 க்கு மிகாமலும் பெறலாம், குழந்தைகளின் எண்ணிக்கையில் உச்ச வரம்பு எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
HADAFன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமூகக் காப்பீட்டில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் குர்ரா திட்டத்தில் பதிவு செய்வதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றிய பணிபுரியும் பெண்களுக்கும் இது அதிகாரம் அளிப்பது குறிப்பிடத்தக்கது.





