கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில் அனைத்து உத்தியோகபூர்வ நடைமுறைகள் மற்றும் பரிவர்த்தனைகளின் நேரத்தைச் சவூதி அமைச்சகம் அங்கீகரித்து, மேலும் ஹிஜ்ரி தேதியின் அடிப்படையில் நேரத்தைக் கணக்கிடும் அனைத்து இஸ்லாமிய ஷரியா விதிகளுக்கும் விதிவிலக்கு இருக்கும் என்று அறிவித்தனர்.
ரியாத்தில் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஹிஜ்ரி காலண்டர் கிரிகோரியன் நாட்காட்டியை விட வருடத்தில் 11 அல்லது 12 நாட்கள் குறைவாக உள்ளது, சவூதி அரேபியா ஹிஜ்ரி நாட்காட்டியை முதல் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாகவும், கிரிகோரியன் இரண்டாவது காலெண்டராகவும் பயன்படுத்துகிறது குறிப்பிடத்தக்கது.





