மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணத்திற்கான கிங் சல்மான் மையம் (KSrelief) குழுவானது கெய்ரோவில் பல அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தி GAZA பகுதிக்குச் சவுதி உதவியை வழங்குவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தது.
இந்த நிகழ்வில் KSrelief குழு எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரமி அல்-நசீரைச் சந்தித்து, காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஃபா கிராசிங் மூலம் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணம் வழங்குவது குறித்து விவாதித்தனர்.
எகிப்து தலைநகரில் உலக சுகாதார அமைப்பின் (WHO) கிழக்கு மத்தியதரைக் கடலுக்கான பிராந்திய இயக்குநரான டாக்டர் அஹ்மத் அல்-மந்தாரியை KSrelief குழு சந்தித்து, காஸா பகுதியில் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான வழிமுறை மற்றும் பாலஸ்தீன பிரதேசத்தின் சுகாதார நிலைமையை மேம்படுத்தக் கூட்டு மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்குச் சவூதி அரேபிய உதவிகளை வழங்குவதற்கான வழிமுறை குறித்து விவாதிக்க KSrelief குழு கடந்த செவ்வாயன்று கெய்ரோ சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.





