நாட்டில் தற்போது நிலவும் கடுமையான காலநிலையைக் கருத்தில் கொண்டும் மாணவர்களின் அசௌகரியத்தைத் தவிர்ப்பதற்கும் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கும் அட்டவணையில் ஒரு சில மாற்றங்களுடன் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது தம்மாம் பன்னாட்டு இந்திய பள்ளி நிர்வாகம்.
அந்த அடிப்படையில் KG, சிறப்பு வகுப்பினர் (Special care section) மற்றும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு விடுமுறை 31 ஆகஸ்டு 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு ONLINE வகுப்புகள் ஆகஸ்டு 21 முதல் ஆகஸ்டு 31 ஆம் தேதிவரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பிரிவு மாணவ/மாணவிகளுக்கும் வழக்கமான வகுப்புகள் 3 செப்டம்பர் 2023 முதல் மீண்டும் தொடங்கும் என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.