சவூதியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அல்-அஹ்சா மாகாணத்தில் அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது, இது இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகப் பதிவாகியுள்ளது.
சவூதியின் பல நகரங்கள் மற்றும் கவர்னரேட்டுகளில் ஜூலை 18 அன்று அதிகபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.அதன் பின் 13 நாட்களுக்குப் பிறகு அல்-அஹ்சா கவர்னரேட்டில் இந்த வெப்பநிலை காணப்பட்டதாகத் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.
திங்களன்று, தம்மாம் நகரில் 49 டிகிரி செல்சியஸ் மற்றும் புரைதாவில் 46 டிகிரி செல்சியஸ், ரியாத், ஷரூரா, வாதி அல்-தவாசிர் மற்றும் ரஃபாவில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த வார இறுதி வரை 46 முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என NCM முன்பே கணித்திருந்தது.
கிழக்கு மாகாணம் மற்றும் மத்திய பிராந்தியத்தின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை தொடரும் என்றும், மக்கா பகுதியில் புழுதிப் புயலுடன் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று NCM தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் 48 முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும், ரியாத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 46-48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.