பிப்ரவரி 22 முதல் 28 வரை, நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வாரத்திற்குள் சுமார் 14,955 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.9,080 பேர் குடியுரிமை முறையை மீறியதற்காகவும்,3,088 பேர் எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும், தொழிலாளர் சட்டங்களை மீறிய 2,787 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் யேமன் மற்றும் எத்தியோப்பியன் நாட்டினர் ஆவர். 57,787 நபர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ளனர்.
பயண ஆவணங்களைப் பெறுவதற்காக 51,401 நபர்களும், பயண முன்பதிவுகளை முடிக்க 1,763 நபர்களும் பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் 10,256 நபர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
குற்றவாளிக்குத் தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி வழங்குபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 1 மில்லியன் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஹாட்லைன்கள் மூலம் விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.