2023 அக்டோபரில் 7.7 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு e-judicial Services தளமான “Najiz” அதன் சேவைகளை வழங்கியதாகவும், 6.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர் என்று சவூதி அரேபியாவின் நீதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நஜிஸின் உயர்தர அம்சங்கள் பயனாளிகள் நீதித்துறை தலைமையகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி தங்களது சொந்த இடங்களிலிருந்தே தங்கள் கோரிக்கைகளை நடத்தி முடிக்க உதவுகிறது.
பயனாளிகளுக்கு மின்னணு வழக்கு, உரிமைகோரல் அறிக்கை, குறிப்பான்கள் பரிமாற்றம், இறுதி தீர்ப்பை வழங்குதல் போன்ற பல சேவைகள் உட்பட 12 மில்லியனுக்கும் அதிகமான நீதித்துறை சேவைகளை நஜிஸ் வழங்கியுள்ளது.
2023 அக்டோபரில், நஜிஸ் பிசினஸ் நிறுவனங்களுக்கான கூடுதல் கணக்கைச் செயல்படுத்தும் சேவை, நீதித்துறைச் செலவுகளுக்காக நஜிஸ் செயலி மூலம் கட்டணச் சேவைகளை இயக்குதல், இணையதளங்கள் மூலம் அமர்வுகளில் கலந்துகொள்ளுதல் போன்ற பல புதிய சேவைகளை இ-பிளாட்ஃபார்ம் மூலம் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.