ரியாத்தில் உள்ள ஐ.நாவின் உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்புத் தலைமையகத்தைச் சவுதி அரேபியா பொறுப்பேற்று நடத்தும் என்று உலகளாவிய புவிசார் தகவல் மேலாண்மைக்கான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு (UN-GGIM) ஒருமனதாக முடிவு செய்ததாகச் சவூதி செய்தி நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் நிலையான புவிசார் சூழலை உருவாக்க டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் சார்புகள் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஆகியவற்றுடன் புவிசார் தரவுகளை ஒருங்கிணைப்பதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தலைமை தாங்குவது இந்த மையத்தின் பணிகளில் அடங்கும்.
சர்வே மற்றும் சிறப்பு புவியியல் தகவலுக்கான(GEOSA) பொது ஆணையத்தின் தலைவர் டாக்டர். பொறியாளர். முகமது பின் யாஹ்யா அல்-சயல் சவூதியில் அவர்களின் பணி தொடர்பான கணக்கெடுப்பு, புவியியல் தகவல்கள் மற்றும் புகைப்படம் எடுத்தல் துறைகளுக்கு ஆதரவை வழங்கியதற்காக இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
GEOSA சவூதி அரேபியாவை முன்னிலைப்படுத்தி, பிப்ரவரி 2015 இல் ரியாத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் புவிசார் தகவல் மேலாண்மைக்கான ஐக்கிய நாடுகளின் நிபுணர்களின் அரபுக் குழுவின் தலைமையாகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அடுத்ததாகப் பிப்ரவரி 2019 இல் ஜித்தாவில் நடைபெற்ற அரபுக் குழுவின் 6வது கூட்டத்தில் அரபுக் குழுவின் தலைவர் மற்றும் செயலகத்திற்கு சவூதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.