ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாகத் துபாய் விமான நிலைய ஓடுபாதை நீரில் மூழ்கியது. வெள்ளம் மற்றும் அதன் பின்விளைவுகளைக் காட்டும் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகத்= தளங்களில் நிறைந்திருந்தது.
துபாய் விமான நிலையத்தில் நீர் மட்டத்தின் அபாயகரமான உயர்வையும், விமானங்கள் இயங்கும் ஓடுபாதையை விடத் தற்காலிக நீர்வழிப்பாதையாகத் தோன்றிய இடத்தில் விமானங்கள் தரையிறங்கியதையும் பார்க்க முடிந்தது.
கடும் புயல் காரணமாக விமான நிலைய செயல்பாடுகள் 25 நிமிடங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, இதனால் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரண்டிலும் பாதிப்பு ஏற்பட்டது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் எனத் தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகள் அல்லது நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். விதிவிலக்கான வானிலை நிலைகளின் போது தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு மனித வளங்கள் மற்றும் குடிவரவு அமைச்சகம், அழைப்பு விடுத்துள்ளது.





