எதிர்காலத்தில் செங்கடலின் மேற்குக் கடற்கரையிலும், சவூதியின் கிழக்குப் பகுதியிலும் அரேபிய வளைகுடாக் கடற்கரை மற்றும் தென்மேற்குப் பகுதிகளிலும் கனமழை அதிகரிக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மைய (NCM) ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
மதீனா, அல்-காசிம், ரியாத், கிழக்கு மாகாணம், மக்கா, ஆசிர், ஜசான் மற்றும் நஜ்ரானின் மேற்குப் பகுதிகள் ஆகிய பகுதிகளில், எதிர்காலத்தில் (2021-2040) நடுத்தர மற்றும் உயர் தட்பவெப்ப நிலைகளின் கீழ் கனமழையின் தாக்கம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக NCM ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
சவூதியின் குறிப்பிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு விகிதங்கள் மற்றும் அளவுகளில் குறிப்பிடத் தக்க உயர்வை ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது, அபஹா, ஜித்தா மற்றும் ரியாத் போன்ற நகரங்களில் மழைப்பொழிவு தரவுகளின் பகுப்பாய்வு, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் மீண்டும் மீண்டும் பெய்யும் மழையின் தீவிரம் முறையே 113,56 மற்றும் 33 மிமீ/நாள் அடையும் என்பதைக் குறிக்கிறது.
50 வருட காலப்பகுதியில், இந்தத் தீவிரங்கள் முறையே 45,86 மற்றும் 169 மிமீ/நாள் அடையும், அதே சமயம் ஒவ்வொரு 100 வருடங்களுக்கும் மீண்டும் நிகழும் தீவிரங்கள் சுமார் 192, 99 மற்றும் 50 மிமீ/நாள் அடையும் என்றும் எதிர்பார்க்க ப்படுகிறது





