ஊடகத்துறை அமைச்சகத்தின் அரசாங்க தகவல் தொடர்பு மையம் (CGC), ஹஜ் மற்றும் உம்ரா கவரேஜ் தொடர்பான ஊடகத்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளப் புதுமையான யோசனைகள் மற்றும் தீர்வுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, பயண அனுபவத் திட்டத்துடன் (PEP) இணைந்து ‘hajj and umrah Mediathon’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
Mediathon, (Mediathon.media.gov.sa) என்ற போர்டல் மூலம் பங்கேற்க அழைக்கிறது. பெருநிறுவன தகவல்தொடர்புகளில் பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் ஹஜ் மற்றும் உம்ராவின் ஊடக கவரேஜின் தரத்தை மேம்படுத்துதல், முக்கிய மத நிகழ்வுகளின் ஊடக பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தப் புதுமையான ஊடக யோசனைகள் மற்றும் திட்டங்களை ஊக்குவித்தலை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.





