ரியாத்தில் நடைபெற்று வரும் உலக பாதுகாப்பு கண்காட்சி 2024 இன் போது, உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளால் 17 ஒப்பந்தங்கள் மற்றும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டதாகச் சவூதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. சவூதி விஷன் 2030ன் லட்சிய இலக்குகளுக்கு ஏற்ப ஆயுதப் படைகளின் தயார்நிலையை அதிகரிப்பது, போர்த் திறனை மேம்படுத்துவது மற்றும் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதை ஊக்குவிப்பது ஆகியவை இந்த ஒப்பந்தங்களின் நோக்கமாகும்.
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் PrivatAir Saudi Arabia (PASA) ஆகியவற்றுக்கு இடையே இரண்டு ஒப்பந்தங்களும், விமானப்படையின் திறன்களை மேம்படுத்தத் தென் கொரிய நிறுவனமான LIG Nex1 உடன் ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
சவூதி அரேபியாவின் ரேதியோன் டெக்னாலஜிஸுடன் ஒரு ஒப்பந்தமும், விமானப்படையின் நலனுக்காக மிடில் ஈஸ்ட் ப்ராபல்ஷன் கம்பெனி லிமிடெட் உடன் இரண்டு ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டது. விமானப்படைக்கான SAMI ஏரோஸ்பேஸ் அண்ட் மெயின்டனன்ஸ் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் தரைப்படைகளுக்கான SAMI LAND சிஸ்டம்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தை அமைச்சகம் இறுதி செய்தது.
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் GAMI லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் ரேதியோன் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் தலா ஒரு ஒப்பந்தங்களும், விமானப்படைக்காக SAAB சவூதி அரேபியாவுடனும், தரைப்படைகளுக்காக ஹாஜி ஹுசைன் அலி ரெசா & கோ. லிமிடெட் நிறுவனத்துடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிக் ப்ளூ பேர்லுடன் இரண்டு ஒப்பந்தங்களும் தரைப்படைகளுக்கான நவீன தொழில்நுட்ப நிறுவனத்துடன் மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்தானது. சவூதி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (SITE) தகவல் தொழில்நுட்பத்தின் பொது நிர்வாகத்திற்கான ஒப்பந்தத்தை அமைச்சகம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.





