Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் உலகளாவிய ஸ்மார்ட் சிட்டி மன்றத்தை நடத்த தயாராக உள்ள சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு...

உலகளாவிய ஸ்மார்ட் சிட்டி மன்றத்தை நடத்த தயாராக உள்ள சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம்.

149
0

சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA) சவூதி அரேபியாவின் முதல் உலகளாவிய ஸ்மார்ட் சிட்டி மன்றத்தைப் பிப்ரவரி 12-13 தேதிகளில் ரியாத்தில் நடத்தத் தயாராக உள்ளது.

ரியாத் அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வானது, 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 80 பிரபல பேச்சாளர்களை ஒன்றிணைத்து, ஸ்மார்ட் நகரங்களின் முன்னேற்றம் குறித்த ஆற்றல்மிக்க விவாதங்களை ஊக்குவிக்கும்.

SDAIA இன் தலைவர் டாக்டர் அப்துல்லா அல்-கம்டி, ஸ்மார்ட் நகரங்களின் கருத்து மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் மன்றத்தின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டி, நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்தச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

தரவு மற்றும் AI அமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்பாடுகளில் சவூதியின் அதிகாரப்பூர்வ அமைப்பாக SDAIA இன் முக்கியப் பங்கை டாக்டர் அல்-காம்டி எடுத்துரைத்தார்.

இரண்டு நாள் அரங்கில் ஸ்மார்ட் நகரங்களின் எதிர்காலம், உள்கட்டமைப்பு மேம்பாட்டின் சவால்களை எதிர்கொள்வது மற்றும் நகர்ப்புற மக்களின் அதிகரித்து வரும் தேவைகளுக்கான புதுமையான தீர்வுகளை ஆராய்வது போன்ற உரையாடல் அமர்வுகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!