Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் உலகத் தமிழ் பொறியாளர்களின் முதல் மாநாடு துபாயில் நடைபெற்றது.

உலகத் தமிழ் பொறியாளர்களின் முதல் மாநாடு துபாயில் நடைபெற்றது.

215
0

ஜனவரி 27ம்நேதி சனிக்கிழமை Global Tamil Engineers forum என்கிற உலகத் தமிழ் பொறியாளர்களின் முதல் மாநாடு துபாயில் நடைபெற்றது இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இந்நிதியாவின் நிலவு மனிதன் டாக்டர் மாயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார்.

Global Tamil Engineers forum யின் president குவைத்திலிருந்து வந்திருந்த திருமிகு கிருஷ்ன ஜெகன் உலகத் தமிழ் பொறியாளர்களின் முதல் மாநாட்டின் வரவேற்ப்புரை வழங்கி வந்திருந்த தமிழ் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.

உலகத் தமிழ் பொறியாளர்களின் முதல் மாநாட்டைத் துவக்க உரையினுடன் துவக்கிவைத்தார் Father. Jegath Gasper அவரது உரையில் எண்ணும் எழுத்தும் என்கிற சொல்லிற்கேற்ப தமிழ் சமூகம் அடிப்படையில் கணிதத்தை முதன்மையாகக் கொண்டது. ஆகவே தமிழ் பொறியாளர்கள் முன்னிற்பது தமிழ் சமூகத்தின் இன்றியமையாதது எனத் தெரிவித்தார். மேலும் விரைவில் உலகளாவிய தமிழ் வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடரந்து அமீரக இந்திய தூதரகத்தின் Consilate General His excellency காளிமுத்து அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் கௌரவ அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருமிகு குனராஜ அவர்கள் தமிழ் சமூக பொறியாளர்கள் ஒரே தளத்தில் இணைவதன் அவசியத்தையும் பின் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட இந்திய நிலவு மனிதன் Dr மயில்சாமி அண்ணாதுரை குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

அதன் பின் விழா பேருரை நிகழ்த்திய Dr மயில்சாமி அண்ணாதுரை தமிழ் பொறியாளர்கள் நடந்து முடிந்தவைகளை நினைத்துப் பெருமிதம் கொள்ளாமல் எதிர்கால நுண்ணறிவை சிந்தித்து உலகிற்கு வழி காட்ட வேண்டும் என உரையாற்றினார்.

இந்நிகழ்வை GTEFயின் உலகலாவிய தலைவர் கிருஷ்ண ஜெகன் தலைமையில் துபாய் தலைவர் அலி அக்பர், செயலாளர் கார்த்திக் மற்றும் பலவேறு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இணைந்து மிகப் பிரமான்டமாக ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உலகம் முழுவதிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

சவூதி அரேபியாவிலிருந்து Rise அமைப்பின் உலகளாவிய பொருளாளர் Dr சாகுல் ஹமீது தலைமையில் Global Tamil Engineers forum த்தின் சவூதி அரேபியத் தலைவர் முகம்மது ரஹ்மத்துல்லா மற்றும் சவூதி துணைத்தலைவர் (கிழக்கு மண்டலம்) முகம்மது நூஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்ப் பொறியாளர்களுக்கான மிகவும் பயனுள்ள இந்த மாநாட்டில் Emerging Engineering Technology & Five Paradigms of the fourth industrial revolution என்கிற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது புதிய உத்வேகத்தை தமிழ் பொறியாளர்களுக்கு ஏற்படுத்தியதாகத் தெரிவித்தனர். மேலும் Global Tamil Engineers forum யில் உலகில் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொறியாளர்கள் தங்களை இணைத்துக்கொண்டு இந்த முயற்ச்சியை மேலும் வலு சேர்க்க வேண்டும் இதன் மூலம் தமிழ் சமூகத்தை உலகின் முன்னோடி சமூகமாகக் கட்டமைக்க இயலும் எனப் பொறியாளர்களுக்கு global tamil engineers from யின் நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!