வங்காளத்தைச் சேர்ந்த 37 வயது உம்ரா பயணி ஒருவருக்கு உம்ரா நிகழ்வுகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது. மக்காவின் கிராண்ட் மசூதிக்கு அருகில் உள்ள அஜ்யாத் அவசர மருத்துவமனையில் மருத்துவக் குழு பயணியின் உயிரைக் காப்பாற்றியது.
ஆம்புலன்ஸ் குழுக்கள் மூலம் அஜ்யத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பயணிக்கு நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை மருத்துவப் பணியாளர்கள் தேவையான உபகரணம் மூலம் CPR ஐ சிகிச்சை வழங்கினர். சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காகப் பயணி கிங் அப்துல்லா மருத்துவ நகருக்கு மாற்றப்பட்டார். அஜ்யாத் மருத்துவமனை 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 596 நபர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





