இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் தலைமையிலான அமைச்சரவை, எண்ணெய் நிலைத்தன்மை திட்டத்தை (OSP) செயல்படுத்துவதில் ஒத்துழைக்கச் சவூதி அரேபியாவிற்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
உணவு விநியோகத்திற்கான சுத்தமான எரிபொருள் தீர்வுகளைத் தரநிலையாக்க ஆப்பிரிக்க நிறுவனத்துடன் கலந்துரையாடல்களை நடத்த எரிசக்தி அமைச்சருக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. சவூதி-மங்கோலிய வெளியுறவு அமைச்சகம் இடையே அரசியல் ஆலோசனை மற்றும் சவூதி-எகிப்து வழங்கல் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகளின் சுற்றுலா அமைச்சகங்களுக்கு இடையே சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்புக்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சுற்றுலாத் துறையில் மனித மூலதனத்தை மேம்படுத்தச் சவூதி அரேபியாவுக்கும் ஆப்பிரிக்க யூனியனுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் மேற்பார்வை மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணையம் மற்றும் நைஜீரியாவின் பொருளாதார மற்றும் நிதிக் குற்றங்கள் ஆணையம், கென்யாவின் நெறிமுறைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான ஊழலைத் தடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.





