அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் காஸாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாலஸ்தீனிய அரசின் மூலம் மட்டுமே அமைதியை அடைய முடியும் என்றும் கூறினார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர், சர்வதேச சட்டங்களை இஸ்ரேலின் மீறல்களைச் சில நாடுகள் நியாயப்படுத்துவதாக வலியுறுத்தினார்.
காஸா தொடர்பாக அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும், போரை நிறுத்திப் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.





