மும்பையில் உள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகம் அனைத்து ஆட்சேர்ப்பு முகவர்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது.
சாதாரண ஸ்டிக்கர் விசா eVisa ஆக மாற்றப்பட்டுள்ளது ,இது 2023 3 மே
முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
விசாவை அச்சிடுவது முகவர்கள் பொறுப்பு என்றும்,முன்னர் வழங்கப்பட்ட சாதாரண ஸ்டிக்கர் விசாக்கள் செல்லுபடியாகாது என்றும்,செல்லுபடியாகும் என்று கருதப்படும் விசாவை காலாவதியாகும் வரை பயன்படுத்தலாம் என துதாரகம் தெரிவித்துள்ளது.
விசாவின் செல்லுபடியை eVisa இல் உள்ள QR குறியீடு அல்லது இணைப்பு வழியாக சரிபார்க்கலாம் என மும்பையில் உள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.