பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சியாகச் சவூதி தமிழ் கலாச்சார மையம் அல்கோபார் நகரில் தமிழ் திருவிழா நிகழ்ச்சியைக் கடந்த நவம்பர் 9 வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 12:30 வரை ஓர் முழுமையான பொழுது போக்கு நிகழ்ச்சியாக KPY காமெடி தர்பார் என்கிற தலைப்பில் நடந்தது.
சுமார் 1700 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். தாயகத்தில் இருந்து வருகை தந்த நகைச்சுவை நட்சத்திரங்கள் மதுரை முத்து, முகமது குரேஷி மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் தங்கள் நகைச்சுவையினால் கலந்து கொண்ட அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தினர்.
நிகழ்ச்சியில் யூனிவர்ஷல் இன்ஸ்பெக்ஷன் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் பதுருத்தீன் அப்துல் மஜீது (ஜூபைல்), PM piping மேலாளர் கரோல் ராஜா, திருச்சியின் எத்திகல் ரியல் எஸ்டேட் பாலா மற்றும் அசோக், மதுரா உணவகத்தின் உரிமையாளர் முத்து, YAJ வின் உரிமையாளர் உமா சங்கர், ஜூபைல் ஹரி பவன் உணவகத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஜாஹிர்ஹூசைன், இன்டஸ்டிரியல் புரோஜக்ஸன் நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜ் முகம்மது, PetroQ நிறுவனத்தின் மேலாளர் பசீர், அல்கோபார் அஞ்சப்பர் உணவகத்தின் உரிமையாளர் ஜியாவுல் ஹக், கிரீன் புட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அஜ்மல் உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.
மாஸ்டர் அனிஷா பிரேம், பாட்ஷா சிக்கந்தர், பூரணி கார்த்திக் ஆகியோர் JTS ன் நிர்வாகிகள் பிரம்மராயன், பிரசாத், பிரேம், பாட்சா மற்றும் கார்த்திக்கின் வழிகாட்டுதலுடன் ஜூபைல் தமிழ் சங்கத்தின் சார்பாகச் சிறப்பான நடனங்களை அரங்கேற்றினர். மேலும் இந்நிகழ்வில் ஜூபைல் பன்னாட்டுப்பள்ளியில் நிர்வாக உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள RTR பிரபுவிற்கு ஜூபைல் தமிழ் சங்கத்தின் சார்பாகக் கேடயம் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் அல்கோபர் நிர்வாகி நெல்சன் தலைமையில் அல்கோபார் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து மாஸ்டர் புனிதா நெல்சன், குல் முகம்மது, ஜெனி, மற்றும் தீபா சத்யநாராயணன் ஆகியோர் இணைந்து பல்சுவை மிகுந்த ஆடல் பாடல் நிறைந்த தமிழ் கலாச்சார நிகழ்வுகளை அரங்கேற்றினர்.
தம்மாம், அல்கோபார் மற்றும் ஜூபைல் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களைச் சரவணன் ராமதாஸ் ஒருங்கிணைத்து 1700 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற மாபெரும் திருவிழாவாக இந்நிகழ்வு அமைந்தது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாகச் சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் தலைவர் ரஹ்மத்துல்லா, சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் அல்கோபார் பகுதியின் நிர்வாகிகள் நூஹ் மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பக்ரைனிலிருந்து வருகை தந்த பக்ரைன் பாரதி தமிழ்சங்கத்தின் துணைத்தலைவர் வல்லம் பசீர் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மிகச்சிறப்பான நிகழ்ச்சியைத் தந்துள்ளதாக கலந்து கொண்ட மக்கள் மகிழ்ந்தனர்.
சுமார் ஆறு மணி நேரம் நடந்த இந்த அல்கோபர் தமிழ்த் திருவிழா சவூதியின் கிழக்கு மாகாணம் வாழ் தமிழ் மக்களுக்கான தீபாவளி விருந்தாக அமைந்தது எனக் கலந்து கொண்டவர்கள் பாராட்டி மகிழ்கின்றனர்.