அல்உலாவிற்கான ராயல் கமிஷனால் ஏற்பாடு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள அரசு அதிகாரிகள், அறிஞர்கள், நிபுணர்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட அல்உலா உலக தொல்லியல் உச்சிமாநாட்டின் போது சவூதி போஸ்ட் (SPL) இன் நினைவு முத்திரையை வெளியிட்டுள்ளது.
உலகளவில் தொல்பொருள் கண்டுபிடிப்புகளை அதிகரித்து, செயல்படுத்துவதன் மூலம் தொல்லியல் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது.
மேலும் மிக முக்கியமான தேசிய அல்லது சர்வதேச நிகழ்வுகள் மற்றும் சந்தர்ப்பங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் சவூதி போஸ்ட் ஸ்டாம்ப்கள் உலகெங்கிலும் உள்ள முத்திரை சேகரிப்பாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களுக்குச் சிறந்த தேர்வாக அமைகிறது.