2021 இல் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மானால் தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஜித்தா புத்துயிர் திட்டத்தின் ஒரு பகுதியாக அர்பயீன் குளக்கரையை மேம்படுத்துவதற்கான முதல் கட்டப்பணி நிறைவடைந்துள்ளது.
பசுமையான இடங்கள் மற்றும் திறந்தவெளி தோட்டங்களுடன், வரலாற்றுப் பகுதிக்குப் புதிய சுவாசத்தைக் கொடுக்கும் வகையில் நீர்முனை உருவாக்கப்படும். பழைய பண்ட் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடல் நீரை திருப்பி விடுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள் ஏற்கனவே வளர்ச்சிப் பணிகளுக்காக நிரப்பப்பட்டுள்ள நிலையில் இது குளத்தின் வடிவத்தை மாற்றியுள்ளது, கடலைத் துறைமுகத்திற்கு திருப்பி இயற்கையான கூறுகள் கிடைக்கும் சூழலை உருவாக்குவதும், தேவையான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை மேம்படுத்துவதும் இத்திட்டத்தில் அடங்கும்.
இந்தத் திட்டம் மெரினா பகுதி அல்லது நீர்முனையை சுற்றியுள்ள பகுதியின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும், மேலும் குளத்தின் வடக்கு மற்றும் தெற்கில் புதிய குடியிருப்புகள், ஹோட்டல் வளாகங்கள், சந்தைகள் மற்றும் உணவகங்கள் ஆகியவை நிலையான குடியிருப்பு மற்றும் வணிக சமூகத்தை உருவாக்கப் பங்களிக்கும்.





