சவூதி அரேபியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக, சவுதி முதலீட்டு மேலாண்மை நிறுவனமான KUN இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங், அமன் ஹெக்ரா திட்டத்தை உருவாக்கப் பொது முதலீட்டு நிதியத்தின் (PIF) துணை நிறுவனமான AlUla டெவலப்மெண்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் கலாச்சார அமைச்சரும், அல்உலாவுக்கான ராயல் கமிஷனின் ஆளுநருமான இளவரசர் பத்ர் பின் அப்துல்லா பின் ஃபர்ஹான், முன்னிலையில் நடைபெற்றது. KUN இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்கின் தலைவர் அப்துல்லா சலேஹ் கமெல், அல்உலா டெவலப்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நயிஃப் சலே அல்ஹம்தான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கையெழுத்து விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தில் KUN இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்கின் CEO முகமது N. ஹெஃப்னி மற்றும் AlUla டெவலப்மெண்ட் நிறுவனத்தின் CEO Fabien Toscano ஆகியோர் கையெழுத்திட்டனர்.இந்தக் கூட்டு முயற்சியில், KUN இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் 80% பங்குகளும், மீதமுள்ள 20% AlUla டெவலப்மென்ட் கம்பெனிக்கும் சொந்தமானது குறிப்பிடத்தக்கது.





