சவூதி உலகின் மிகச்சிறந்த பேரீச்சை பழமான அஜ்வா பேரீச்சம்பழங்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக பொது முதலீட்டு நிதியம் (PIF) அல் மதீனா ஹெரிடேஜ் நிறுவனத்தை (MHC) நிறுவுவதாக அறிவித்துள்ளது.
அஜ்வா பேரிச்சம்பழங்களில் அதிக ஊட்டச்சத்து,குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகள், நார்ச்சத்து, புரத ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் உலகின் மிகச்சிறந்த பேரிச்சம்பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.மேலும் இவை இஸ்லாமிய உலகில் மத மற்றும் கலாச்சார மதிப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவின் உணவு மற்றும் விவசாயத் துறையின் முக்கிய அங்கமாகப் பேரீச்சம்பழத் தொழில் உள்ளது என்றும், சவூதி உலகின் மிக முக்கியமான உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் ஒன்று எனவும், அதன் தயாரிப்புகள் எப்போதும் உயர்ந்த தரத்தில் உள்ளன என்று PIF இல் உள்ள MENA இன்வெஸ்ட்மென்ட் பிரிவின் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சில்லறை விற்பனையின் தலைவர் மஜித் அல் அஸ்ஸஃப் கூறினார்.
அல் மதீனா ஹெரிடேஜ் நிறுவனம் அஜ்வா பேரீச்சம்பழங்களின் உற்பத்தி மற்றும் தரத்தை அதிகரித்து அதன் தயாரிப்புகளின் விளம்பரம் மற்றும் விநியோகத்தை மேம்படுத்த உதவுகிறது.
உள்ளூர் பொருளாதாரத்தை ஆதரிக்க உணவு மற்றும் விவசாயத் துறையில் PIF முதலீடு செய்கிறது, மேலும் இந்த முதலீடுகளில் சவூதி பாரம்பரிய குலானி காபியை ஊக்குவிக்கும் சவூதி காபி நிறுவனம், ஹலால் தயாரிப்புகள் துறையில் முதலீடு செய்யும் ஹலால் தயாரிப்புகள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சவூதி விவசாய முதலீடு மற்றும் கால்நடை உற்பத்தி நிறுவனம் (SALIC) ஆகியவையும் அடங்கும்.