Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் அக்டோபர் 16 முதல் நான்கு நாட்கள் ரியாத்தில் நடத்தப்பட உள்ள நவீன கண்காட்சி.

அக்டோபர் 16 முதல் நான்கு நாட்கள் ரியாத்தில் நடத்தப்பட உள்ள நவீன கண்காட்சி.

216
0

கைத்தொழில் மற்றும் கனிம வள அமைச்சரும் சவூதி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவருமான பந்தர் அல்கோராயேப்பின் ஆதரவின் கீழ் “சவூதியின் கைவினைத்திறன்” என்ற கருப்பொருளில் அக்டோபர் 16 முதல் 19 வரை “Made in Saudi Expo” கண்காட்சியின் இரண்டாம் பதிப்பை நடத்த தயார் நிலையில் உள்ளது Riyadh’s vibrant Roshn Front.

உள்நாட்டுப் பொருட்களுக்கான தேவையை அதிகரிப்பதற்கும், உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் நுகர்வோருக்கு விருப்பமான தேர்வாக அவற்றை நிலைநிறுத்துவதற்கும் பார்வையாளர்களுக்கு ஆழ்ந்த தொழில் அனுபவத்தை வழங்குவதையும் இந்தக் கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசு, தொழில், முதலீடு, தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், குறிப்பிடத் தக்க தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்கள்.

பெட்ரோ கெமிக்கல்ஸ், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, கடல்சார் தொழில்கள், கட்டுமானப் பொருட்கள், உணவு, மருந்துகள், மருத்துவப் பொருட்கள், தொழில்நுட்பம், போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் பல துறைகளில் 100க்கும் மேற்பட்ட சவுதி நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!