மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) 2023 முதல் பாதியின் இறுதி வரை ஃப்ரீலான்ஸர்களுக்கு 2,358,000 சுய வேலைவாய்ப்பு ஆவணங்களை வழங்கியுள்ளது.
சவூதியில் 1,674,600 க்கும் மேற்பட்ட ஃப்ரீலான்ஸ் தொழிலாளர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கான சுயவேலைவாய்ப்பு ஆவணங்களை வழங்குவதற்கு 281 அங்கீகரிக்கப்பட்ட தொழில்கள் மற்றும் 47 அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் இருப்பதாகவும் தரவு சுட்டிகாட்டியுள்ளது.
சுய வேலைவாய்ப்புக்கான ஆன்லைன் தளங்களின் மூலம் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளில் வேலை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கி இந்த ஆவணம், ஃப்ரீலான்ஸர்களுக்கு சமூகக் காப்பீட்டில் தன்னார்வப் பதிவு செய்துகொள்ளவும், ஆவணத்தை அதிகாரப்பூர்வ ஆவணமாகப் பயன்படுத்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவும், ஆவணத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கைத் திறக்கவும் உதவும் வகையில் அமைச்சகம் ஒரு வருட செல்லுபடியாகும் ஃப்ரீலான்ஸ் சான்றிதழை வழங்குகிறது.
ஜூன் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் 377,800 நெகிழ்வான பணி ஒப்பந்தங்களையும், 115,000 தொலைதூர ஊழியர்களுக்கான உரிமங்களையும் அமைச்சகம் வழங்கியுள்ளது.மேலும் தொலைதூர வேலை மற்றும் நெகிழ்வான வேலைகளை நம்பியிருக்கும் நிறுவனங்கள் முறையே 7,800 மற்றும் 7,600 நிறுவனங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.