சவூதி அரேபியாவுக்கு வந்த பயணிகள் சுமார் 1.33 கிலோ ஹெராயின் போதைப்பொருளை குடலில் மறைத்து வைத்துக் கடத்த முயன்றதை ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) முறியடித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட பயணிகள் ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்ல அஜிஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் வழியாக வந்ததை ZATCA உறுதிப்படுத்தியது. பறிமுதல் நடைமுறைகள் முடிந்ததும், ZATCA, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்துடன் (GDNC) ஒருங்கிணைந்து குற்றவாளிகளைக் கைது செய்ததாக ZATCA தெரிவித்துள்ளது.