ரியாத்தில் கூட்டு பாதுகாப்பு பயிற்சியை, சவூதி ராயல் கார்டு மற்றும் பஹ்ரைன் ராயல் கார்டு இணைந்து தொடங்கியுள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் நாசர் பின் ஹமத் அல் கலீஃபா, பஹ்ரைன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சுப்ரீம் டிஃபென்ஸ் கவுன்சிலின் பொதுச் செயலாளர் மற்றும் ராயல் கார்டு கமாண்டர் மற்றும் சவூதி ராயல் கார்டு ஜெனரல் சுஹைல் பின் சக்ர் அல்-முதாரி ஆகியோரின் மேற்பார்வையில் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.
செயல்பாட்டுத் துறைத் தலைவர் மற்றும் கூட்டுப் பயிற்சியின் பொது மேற்பார்வையாளர் மேஜர் ஜெனரல் முகமது பின் சயீத் அல்-ஒமரி பயிற்சியினை தொடங்கி வைத்தார். சவூதி மற்றும் பஹ்ரைன் இடையே உள்ள உறவுகளின் ஆழத்தை இது வலியுறுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல், ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்வது , ஆளுமை பாதுகாப்பு, சிறப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்களின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.