மக்கா மற்றும் மதீனா செல்ல ஹரமைன் அதிவேக ரயிலில் ஏறும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரயில் நிலையத்திற்கு வர வேண்டும், ரயிலில் ஏறும் முன் டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும், தூய்மையை பராமரிக்க வேண்டும், குழுவினரின் உத்தரவுகளைப் பின்பற்றுதல், டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இருக்கையில் அமர வேண்டும் என்றும், இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் எனவும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் சீசனுக்கான ஹரமைன் அதிவேக இரயில்வே செயல்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததாகச் சவூதி ரயில்வே நிறுவனம் (SAR) முன்னதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஹரமைன் அதிவேக இரயில்வேயைப் பயன்படுத்தும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 96% அதிகரித்து 750,000 ஐ எட்டியுள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.