இந்த ஆண்டு ஹஜ்ஜிற்கான துப்புரவு ஒப்பந்தங்களில் 13,549 தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மைப் பார்வையாளர்கள் உள்ளதாகப் புனித மக்கா நகராட்சி தெரிவித்துள்ளது.
7,250 பேர் புனித தலங்களில் பணிபுரிய ஒதுக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 912 துப்புரவு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொது துப்புரவு பணியை ஆதரிக்கும் வகையில், ஹஜ்ஜின்போது 9 கழிவு கம்பேக்டர் லாரிகளை விநியோகித்ததுடன், புனித தலங்களில் 6 நடமாடும் துப்புரவு நிலையங்களை நகராட்சி இயக்கியுள்ளது.
து அல்-ஹிஜ்ஜா மாதத்தின் தொடக்கத்திலிருந்து 12 நாட்களில் உருவாக்கப்பட்ட மொத்த கழிவுகள் 68,000 டன்களைத் தாண்டியுள்ளது. 111 தரை சேமிப்பு மற்றும் 1,071 சிறிய பெட்டிகள் செயல்பாட்டுத் திட்டத்தின்படி புனித தளங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் சீசனுக்கான தூய்மைப் பணிகள் பயணிகள் வருகைக்கு முன்பே தொடங்கியது. துப்புரவு பணியாளர்களை வெயிலிலிருந்து பாதுகாக்கும் வகையில், காலை, மாலையென இரு ஷிப்ட்களாகப் பிரிக்கப்பட்டு, மதிய நேரத்தைத் தவிர்த்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முயற்சிகள் புனித மக்கா முனிசிபாலிட்டி ஹஜ் பருவத்தின்போது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வருகின்றது, இது மக்கா மற்றும் புனிதத் தலங்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களுடன் தொடர்புடையது.