புனிதத் தலங்களுக்குள் உள்ள யாத்ரீகர்களின் கூடாரங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் அலுவலகங்களுக்குள் அனைத்து வகையான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுக்களை (எல்பிஜி) பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம் உறுதி செய்துள்ளது. ஜூன் 19 ஆம் தேதி முதல் இந்தத் தடை நடைமுறைக்கு வந்தது.
புனிதத் தலங்களில் உள்ள யாத்ரீகர்கள் முகாம்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தவிர்ப்பதற்காக விதிக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளின் கட்டமைப்பிற்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சிவில் பாதுகாப்புத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு மேலும் செயற்படுத்தப்படும். தண்ணீரை சூடாக்குவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய சிலிண்டர்கள் உட்பட அனைத்து வகையான எல்பிஜி சிலிண்டர்களும் தடை செய்யப்பட்டுள்ளன எனச் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிமைத் தற்காப்புத் துறையின் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேற்பார்வைக் குழுக்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் அனைத்து அதிகாரிகளையும் உள்ளடக்கிய கள ஆய்வுச் சுற்றுப்பயணங்கள் மூலம் புனிதத் தலங்களான மினா, முஸ்தலிஃபா மற்றும் அராபத் ஆகியவற்றிற்குள் இந்த தடை கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.