மக்கா, மதீனா மற்றும் புனித தலங்கள் உட்பட சவூதி அரேபியாவின் பிராந்தியங்களில் வியாழக்கிழமை வெப்பநிலையை மதிப்பாய்வு செய்யும்போது தேசிய வானிலை மையம் இந்த அளவீட்டைத் தெரியப்படுத்தியுள்ளது.
மக்கா, மதீனா மற்றும் புனிதத் தலமான மினாவில் அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு நகரமான அபஹாவில் மிகக் குறைந்த வெப்பநிலையாக 17 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வரவிருக்கும் ஹஜ் பருவத்தின்போது புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவில் வானிலை நிலைமைகளைத் தேசிய வானிலை மையம் கணித்துள்ளது.அந்த அடிப்படையில் மக்கா நகரம் பகலில் ஒப்பீட்டளவில் வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும் என்றும், இரவில் மிதமாகவும் இருக்கும் என்றும் NCM தெரிவித்துள்ளது. மக்காவில் அதிகபட்ச வெப்பநிலை 43.6 முதல் 45 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29.6 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதீனாவைப் பொறுத்தவரை, ஹஜ் பருவத்தில் அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 29.3 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.