இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணம் கோவிட்-19 தொற்று நோய்ப் பரவலுக்குப் பின் இந்த ஆண்டு ஒரு முழுமையான திறன் கொண்ட கூட்டத்துடன் தொடங்கியுள்ளது. மூன்று ஆண்டு காலத்திற்குப் பிறகு இந்தப் பயணம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றது.
உலகெங்கிலும் உள்ள 160 நாடுகளிலிருந்து இரண்டு மில்லியனுக்கும் அதாவது 20 லட்சத்திற்கும் அதிகமான ஹஜ் பயணிகள் இந்த வாரம் மக்காவில் உள்ள புனித மசூதியில் ஒன்றிணைந்து புனித நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள புனித தளங்களிலும் தங்கள் வாழ்நாள் ஆன்மீக பயணத்தைத் தொடங்குகின்றனர்.
புள்ளிவிபரங்களுக்கான பொது அதிகாரசபை வெளிப்படுத்திய புள்ளிவிபரங்களின்படி, 1440 இல் ஹஜ் செய்த பயணிகளின் எண்ணிக்கை 2.4 மில்லியனைத் தாண்டியது. அதே நேரத்தில், உள்நாட்டு பய்ணிகளின் எண்ணிக்கை 2,11,000 சவுதிகள் மற்றும் 4,23,000 வெளிநாட்டினர் உட்பட சுமார் 6,34,000 ஆண் மற்றும் பெண் பயணிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.