சுற்றுச்சூழல் இணக்கத்திற்கான தேசிய மையம் (NCEC), ஹஜ் 2023 இன் போது யாத்ரீகர்களுக்கான தேவையான சுற்றுசூழல் தரமானது அதன் நோக்கத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று NCEC தெரிவித்துள்ளது.
மக்கா, மதீனா மற்றும் புனிதத் தலங்களில் யாத்ரீகர்கள் வசிக்கும் இடங்களும், சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் அதன் நிர்வாக விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையான தரநிலைகளை உறுதி செய்வதும் இதில் அடங்கும்.
மேலும் NCEC யின் தலைவர் கூறும்போது மக்கா, மதீனா, புனித தலங்கள் மற்றும் அங்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களில் 1,350 களச் சுற்றுப்பயணங்களை நடத்தி இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கான சுற்றுச்சூழல் கண்காணிப்புத் திட்டத்தை நிறைவு செய்ததை அலி அல்-ஹம்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் அனைத்து வளர்ச்சித் துறைகளிலும் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சுற்றுச்சூழல் மையம் கண்காணித்து வருவதாக அல்-ஹம்தி உறுதிப்படுத்தினார்.
தரமான தரத்தைக் கண்காணிக்க மொபைல் சாதனங்களை எடுத்துச் சென்று டஜன் கணக்கான சுற்றுச்சூழல் நிபுணர்களால் இந்த அளவீடு நடத்தப்பட்டது. அவர்கள் சுற்றுச்சூழல் தரநிலைகள் மற்றும் விதிமுறைகளுடன் இணக்கமான தரவை மத்திய கண்காணிப்பு நிலையத்திற்கு அனுப்பினர்.மேலும் இது காற்றின் தரத்தை அளவிடுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விதிமுறைகளின்படி ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் காற்று மாசுபடுத்திகளை பகுப்பாய்வு செய்தது என்றும் அல்-ஹம்தி கூறினார்.
மேலும் மக்கா, மதீனா மற்றும் புனிதத் தலங்களில் அவர்களுக்கு விநியோகிக்கப்படும் குடைகளில் அச்சிடப்பட்ட பார்கோடு மூலம் சுற்றுச்சூழல் வழிகாட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு செய்திகளை யாத்ரீகர்கள் அணுக முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.