ஹஜ் பயணிகளின் சேவை வழங்குனர்களுக்கான சட்ட வரைவு விளக்கக் குறிப்பைத் தயாரித்து முடித்த ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அவை அரசு இதழில் வெளியிடப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் எனவும், மேலும் ISTITLAA தளத்தின் மூலம் வரைவு சட்டம்குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளது அமைச்சகம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஹஜ் பயணிகளுக்குச் சிறந்த தரமான சேவைகளை வழக்குனர்கள் வழங்குவதை உறுதி செய்ய வடிவமைக்கப்பட்ட பல கட்டுரைகள் வரைவு சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கவும், எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்குவது, நிதி அபராதம், குறிப்பிட்ட காலத்திற்கு ஹஜ் சேவையை வழங்குவதிலிருந்து இடைநீக்கம், சேவை வழங்குநருக்கு வழங்கப்பட்ட வகைப்பாட்டைக் குறைத்து உரிமத்தை ரத்து செய்தல் ஆகியவை சட்ட வரைவு விதிகளில் அடங்கும். மேலும் மீறுபவருக்கு விதிக்கப்படும் அபராதம் மீண்டும் மீறும் பட்சத்தில் இரட்டிப்பாக்கப்படலாம்.
உரிமத்தைப் பெறாமல் சேவை வழங்கும் செயல்பாட்டைப் பயிற்சி செய்ததற்காகச் சவூதி ரியால் 500,000 அபராதமும், அவர் வெளிநாட்டவராக இருந்தால் அவரை நாடு கடத்துவது போன்ற தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என அமைச்சகம் அறிவித்துள்ளது.
சட்டத்தின்படி சேவை வழக்குனர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட சில பணிகளைச் செய்ய அமைச்சகம் சிறப்பு நிறுவனங்கள் அல்லது தொழில்நுட்ப நிறுவனங்களை நாடுவதற்கு அனுமதிக்கப்பட்டு இதற்காக, அமைச்சரின் முடிவின் மூலம் மூன்று தகுதியான உறுப்பினர்கள் கொண்ட குழுக்களை உருவாக்கி, அவர்களில் ஒருவர் தலைவராகவும், ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொதுச் செயலாளரும் இருக்கும் இருப்பர்.
குழுவின் பொதுச் செயலாளர் மற்றும் பணியாளர்கள் சட்டத்தின் விதிகள் அல்லது அதைச் செயல்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட முடிவுகளை மீறுதல் மற்றும் அபராதம் விதித்தல் ஆகியவற்றை ஆய்வு செய்யப் பொறுப்பாவார்கள். மேலும் குழுவின் முடிவுகள் பெரும்பான்மை வாக்குகளால் வெளியிடப்பட்டு அமைச்சர் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியால் செயல்படுத்தப்படும்.
சட்டத்தின்படி உரிமம் பெற்ற சேவை வழங்குனர்களை மேற்பார்வையிடுவதற்கும், அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதற்கும் கூடுதலாக அவர்களின் செயல்திறனைக் கண்காணிப்பது அமைச்சகத்தின் பொறுப்புகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.