ஹஜ் பருவத்திற்கு 10 நாட்களுக்கு முன்னதாக பயணிகள் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதற்கான கடைசி தேதி என்றும்,தடுப்பூசிகளைப் பெறுவது அவர்கள் ஹஜ் சடங்குகளைச் செய்ய உதவும் ஒரு நிபந்தனை என்றும்,ஹஜ் அனுமதிப்பத்திரத்தை வழங்க அனைத்து தடுப்பூசிகளையும் பூர்த்தி செய்வது கட்டாயம் என்றும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஹிஜ்ரி 1444 ஆம் ஆண்டிற்கான ஹஜ் அனுமதிப்பத்திரம் மே 5 ஆம் தேதிக்கு இணையான ஷவ்வால் 15 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு, உள்நாட்டு பயணிகள் தங்களது ஹஜ் முன்பதிவின் மூன்றாவதும் இறுதியுமான தவணையை செலுத்துவதற்கு ஷவ்வால் 10ஆம் தேதி இறுதி நாள் என அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஹஜ் பருவத்தில் அங்கீகரிக்கப்பட்ட பேக்கேஜ்களுக்குக் குறிப்பிடப்பட்ட கட்டணத்தில் இருந்து இறுதி தவணை தொகை 40% ஆகும்.
நுசுக் ஆப் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன்பும் அதற்கும் மேலாக சடங்குகளைச் செய்த பயணிகளுக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி ஹஜ் ஐ நிறைவேற்றுவதற்கான பதிவுகளை அமைச்சகம் திறந்தது.மேலும் இதற்கு முன்பு ஹஜ் சடங்குகளைச் செய்யாத பயணிகள் , ஜூன் 25 உடன் தொடர்புடைய அல்-ஹிஜ்ஜா 7 வரை இந்த ஆண்டு ஹஜ் செய்ய விண்ணப்பிக்க முடியும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.