இந்த ஹஜ் பருவத்திற்கான தடுப்பு சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான தயார்நிலையை சுகாதார அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.
மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் , சிறப்பு மையங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நோயாளிகளின் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் பயன்படுத்தப்படும் உயர் திறன் கொண்ட காற்று சுத்திகரிப்பான்கள் ஆகியவை அடங்கும் என அமைச்சகம் விளக்கியுள்ளது. சுற்றுச்சூழல் கிருமிநாசினி சாதனங்கள், சுவாச பரிசோதனை சாதனங்கள், தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் உட்பட தடுப்பு சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் மற்றும் கருவிகளும் கிடைக்கின்றது.
பயணிகளுக்குச் சேவை செய்யும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, தடுப்பு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த ஹஜ் பருவத்திற்கான சுகாதாரத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கான முக்கிய தூண்களில் ஒன்றாகும் என அமைச்சகம் கூறியுள்ளது. தொற்று கட்டுப்பாடு, பிற தடுப்பு சுகாதார அடிப்படைகள்குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.