ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது 44 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், வர்த்தக வகுப்பில் 44% தள்ளுபடி மற்றும் எகானமி வகுப்பில் 25% தள்ளுபடி உட்பட பல சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
முன்பதிவுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 3, 2023 வரை திறந்திருக்கும். பயணம் செப்டம்பர் 15 முதல் நவம்பர் 30, 2023 வரை தொடங்குகிறது. அனைத்து கட்டணங்களும் விமானங்களும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.