ஷாங்காய் தரவரிசையில் இடம் பெற்ற சவுதி பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு 7ல் இருந்து 2023 இல் 12 ஆக உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரவரிசையில் (ARWU) ஐந்து சவூதி பல்கலைக்கழகங்கள் உலகின் முதல் 1,000 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முன்னேறியுள்ளதாக ஷாங்காய் தரவரிசை ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகளாவிய வகைப்படுத்தல், கல்வியின் தரம், ஆசிரிய உறுப்பினர்களின் செயல்திறன், அறிவியல் ஆராய்ச்சியின் வெளியீடுகள், நிறுவனத்தின் அளவு மற்றும் தரநிலைகளின் தொகுப்பின்படி ARWU உலகப் பல்கலைக்கழகங்களை வரிசைப்படுத்துகிறது.
முதல் முறையாகத் தரவரிசையில் முன்னேறிய சவூதி பல்கலைக்கழகங்கள் ரியாத்தை தளமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக்கழகமான இளவரசி நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம் 601 மற்றும் 700 க்கு இடையிலும், அதைத் தொடர்ந்து தம்மாம் கிங் பைசல் பல்கலைக்கழகம், அல்-காசிம் பல்கலைக்கழகம் மற்றும் உம் அல்-குரா பல்கலைக்கழகம் 801 மற்றும் 900 தரவரிசைகளுக்கு இடையிலும், பின்னர் அல்-ஜூஃப் பல்கலைக்கழகம் 901-1000 தரவரிசைக்குள் உள்ளன.
உலகளவில் கிங் சவுத் பல்கலைக்கழகம் 101-150 க்கு இடையில் ஒரு இடத்தையும், அதைத் தொடர்ந்து கிங் அப்துல் அஜிஸ் பல்கலைக்கழகம் உலகளவில் 151-200 க்கு இடையிலும் தாயிஃப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 201- 300 க்கு இடையில் ஒரு இடத்தைப் பெற்றிருப்பதால் சவூதி பல்கலைக்கழகங்கள் சிறப்பான நிலைகளை எட்டியுள்ளன.
ஷாங்காய் வகைப்பாடானது QS உலக பல்கலைக்கழக தரவரிசை மற்றும் பிரிட்டிஷ் டைம்ஸ் உயர் கல்வி தரவரிசை ஆகியவற்றுடன் கூடுதலாக மூன்று முக்கிய உலகளாவிய வகைப்பாடு சங்கங்களில் ஒன்றாகும்.
இந்த ஆண்டு, 2500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உலகின் சிறந்த 1000 பல்கலைக்கழகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 21வது ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் முதலிடத்திலும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்ஐடி) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.