Home சவூதி அரேபியா சட்டங்கள் வெளிநாடுகளில் இருந்து ,சவூதி அரேபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்காக ...

வெளிநாடுகளில் இருந்து ,சவூதி அரேபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்காக தற்போது சவூதி-இன் தொழிலாளர் விதிகள்

258
0

வெளிநாடுகளில் இருந்து ,சவூதி அரேபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்காகத் தற்போது சவூதி-இன் தொழிலாளர் விதிகளில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின்  முந்தைய   தொழிலாளர் விதிகளின்   படி ,சவூதி- க்கு ,ஒரு நிறுவனத்தின்  ஒப்பந்தம்மூலம்  பணிபுரிய வருபவர்கள், அந்த ஒப்பந்தம்  முடிவடைந்ததும், அதே  நிறுவனத்தில்  ஒப்பந்தத்தைப் புதிப்பித்து   பணிபுரியலாம்  அல்லது   ஒப்பந்தத்தை  நிறைவு செய்தபின்  நாட்டைவிட்டு வெளியேறலாம்  என்ற விதிகள்   மட்டுமே  நடைமுறையில்  இருந்தது. இப்போது பணிபுரியும்  நிறுவனத்தை  மாற்றி வேறு   நிறுவனத்தில்  இணைந்து  பணிபுரிந்து  கொள்ளலாம் என்ற விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

(Termination of an Employment Contract )-ஒரு வேலை ஒப்பந்த  முறிவு  Article 74 :

1. தொழிலாளியின் ஒப்புதல் எழுத்துப்பூர்வமாக(in written) இருந்து,இரு தரப்பினரும் (நிறுவனம் & வேலை செய்பவர்) அதை முறிக்க ஒப்புக்கொண்டால்,

2. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு காலாவதியாகி (contract period expire), ஒப்பந்தம் வெளிப்படையாகப் புதுப்பிக்கப்படாத நிலையிலும்,

3. இந்தச் சட்டத்தின் பிரிவு 75 -ல் கூறப்பட்டுள்ள விதிகளை பின்பற்றி, காலவரையற்ற கால ஒப்பந்தங்களில்( indefinite term) இரு தரப்பினரின் ஒப்பந்தத்தை முறிக்க விருப்பினால்,

4. சமூகக் காப்பீட்டு சட்டம் -Gosi (கோசி ) விதிகளின்படி,தொழிலாளி ஓய்வுபெறும் வயதை (retirement)அடையும் போது,இந்த வயதிற்குப் பிறகு வேலையைத் தொடர இருதரப்பினரும் (நிறுவனம்&வேலை செய்பவர்) ஒப்புக்கொள்ளாவிட்டாலும்,

5.எதிர்பாராத மற்றும் அசாதரணமான சூழ்நிலைகளிழும் போது, அதாவது இயற்கை காரணங்கள் (தீ, புயல்கள், வெள்ளம்), அரசு அல்லது சமூக நடவடிக்கைகள், உள்நாட்டு அமைதியின்மை, உள்கட்டமைப்பு தோல்வி போன்ற சூழ்நிலைகளிழும்,

6.நிறுவனத்தை நிரந்தரமாக மூடுதல் போன்ற நடவடிக்கையாலும்,

7. பணிபுரியும் நிறுவனத்தின் ஒரு துறையில் இருந்து வேறு ஒரு துறைக்கு வலுக்கட்டாயமாக பணியில் அமர்த்தப்பட்டாலும்,

8. வேறு எந்தச் சட்டத்தினாலோ வழங்கப்பட்ட மற்ற வழக்குகளுக்காகவும் வேலை ஒப்பந்தம் முறிவு பெறும்.

வேலை ஒப்பந்தம் முறிவு பெறும் பட்சத்தில் தொழிலாளி, பணிபுரியும் நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு விதிமுறைகளை பின்பற்றி மாறிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

காலவரையற்ற ஒப்பந்தம் ::அதாவது contract period ஒருவருடமோ அல்லது இரண்டு வருடமோ என்ற காலவரையரை குறிப்பிடபடாமல் உள்ள ஒப்பந்தம் (contract)பற்றி (Article 75) கட்டுரை 75-இல் குறிப்பிடபட்டுள்ள தகவல்களை காணலாம் :

காலவரையற்ற ஒப்பந்தங்களில், சரியான காரணத்தை எழுத்துப்பூர்வன அறிவிப்பை (written notice) கொடுத்து, இரு தரப்பினரும் (நிறுவனமோ அல்லது பணிபுரிபவரோ) ஒப்பந்ததை முறிக்கலாம். (contract) ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள,ஒப்பந்த முறிவுக்கனா — கால அளவை பின்பற்றி இந்த அறிவிப்பு (நோட்டீஸ்)வழங்கப்பட வேண்டும் .

(உதாரணமாக : contract-இல் இருந்து வெளியேறும் போது 2 அல்லது 3மாதம் முன்பு நோட்டீஸ் தரவேண்டும் என்று contract-ல்இருக்கலாம்)

ஒப்பந்த முறிவு-க்கு 60 நாட்கள் முன்பு இந்த நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். நிறுவனம் தொழிலாளிக்கு உரிய சம்பளத்தை மாதந்தோறும் சரியாக வழங்கமால் இருந்தால் ஒப்பந்த முறிவு- க்கு 30 நாட்கள் முன்பு இந்த நோட்டிசை வழங்கலாம்.

காலவரையற்ற ஒப்பந்ததில் :(அதாவது contract period ஒருவருடமோ அல்லது இரண்டு வருடமோ என்ற காலவரையரை குறிப்பிடபடாமல் உள்ள ஒப்பந்தம்)ஒப்பந்தம் முறிவுக்கனா காலஅளவை

(நோட்டீஸ் period) இரு தரப்பினரும் கடைபிடிக்கத் தவறினால் . என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறது –(Article 76) (கட்டுரை-76)

காலவரையற்ற ஒப்பந்தங்களில், நோட்டீசில் (written notice) குறிப்பிடபட்டுள்ள ஒப்பந்த முறிவுக்கனா கால அளவு artical -75ல் குறிப்பிட்டபட்டுள்ள விதிகளை, இரு தரப்பினரும் (நிறுவனமோ அல்லது பணிபுரிபவரோ) கடைபிடிக்கத் தவறினால் . ஒப்பந்தத்தை முறிக்கும் தரப்பினர் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவுகளுக்கு தொழிலாளியின் ஊதியத்திற்கு இணையான இழப்பீட்டை வழங்க வேண்டும்.

உதாரணமாக: article-75 ன் விதிகளை பின்பற்றி ஒப்பந்தத்தை முறிக்க 60 நாட்கள் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று இருந்து 60 நாட்களுக்குள் முன்பே ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு வெளியேற விரும்பினால் வெளியேறும் தரப்பு (நிறுவனமோ அல்லது பணி புரிபவரோ 60 நாட்களுக்கான தொழிலாளியின் ஊதியத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்.

முறையான காரணம் இன்றி(contract)ஒப்பந்தத்தை நிறுவனமோ அல்லதுபணிபுரிபவரோ)இருதரப்பினரில் யாரேனும் ஒப்பந்தத்தை முறித்து இருந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, மற்றொரு தரப்பு இழப்பீட்டினை வழங்க வேண்டும். என்பது குறித்து விளக்குகிறது :artical 77

Article 77,குறிப்பிட பட்டுள்ளதை காணலாம் :

முறையான காரணம் இன்றி ஒப்பந்தத்தை முறித்தால்,பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் இழப்பீட்டிற்கு உரிமையுடையவர்கள்:

1. காலவரையற்ற ஒப்பந்தங்களில்:தொழிலாளி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு வருடத்திற்கும் பதினைந்து நாள் ஊதியம் என்று கணக்கிட்டு அதற்கு சமமான தொகை. இழப்பீடாக வழங்க வேண்டும்.

2. நிலையான கால ஒப்பந்தங்களில்:ஒப்பந்த காலத்தின்(contract period)மீதமுள்ள ஊதியத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்.

3. மேற்காணும்,பத்தி (1) மற்றும் (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள இழப்பீடு தொகை, இரண்டு மாதத்திற்கான தொழிலாளியின் ஊதியத்தை விட குறைவாக இருக்கக்கூடாது.

முதலாளியால் நோட்டீஸ்(notice)வழங்கப்பட்டால்,தொழிலாளியின் விடுப்பு உரிமை குறித்து விளக்குகிறது:artical 78

Article 78 குறிப்பிட பட்டுள்ளதை விரிவாக காணலாம் :

முதலாளியால் நோட்டீஸ்(notice)வழங்கப்பட்டால்,வேறு வேலை தேடுவதற்காக ,பணியாளர் ஒரு முழு நாள் அல்லது வாரத்திற்கு எட்டு மணிநேரம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்து கொள்ளலாம்,விடுப்பு நேரத்தை தீர்மானிக்க பணியாளருக்கு உரிமை உண்டு,அதுகுறித்து,குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாகவே முதலாளிக்கு அறிவிக்கப்பட வேண்டும், நோட்டீஸ் வழங்கபட்ட காலத்தில் (notice period)முதலாளி தொழிலாளியை விடுப்பை ஏற்று சேவை காலத்தை பாதிக்காத வகையில் பணியாளரை அனுமதிக்கலாம்.

முதலாளி அல்லது பணிபுரிபவரின் இறப்பு ஆரோக்கியமின்மை போது,ஏற்படும் ஒப்பந்த முடிவு விளக்குகிறது விளக்குகிறது article 79

Article 79 குறித்து விரிவாக காணலாம் :

முதலாளியின் மரணத்தால் வேலை ஒப்பந்தம் காலாவதியாகாது.முதலாளியின் இறப்பை தொடர்ந்து பொறுப்புகுரியவர், கருத்தில் கொண்டு ஒப்பந்தத்தை முடிக்கலாம்.தொழிலாளி ஒப்பந்தமானது ,அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி தொழிலாளியின் இறப்பு அல்லது மருத்துவ கரங்களால் அவரது பணியை தொடர முடியாமல் இருத்தால் ஒப்பந்தம் முடிவு ஏற்படும்.

முதலாளி, தொழிலாளிக்கு முன்கூட்டியே அறிவிப்பு அல்லது இழப்பீடு வழங்காமல் ஒப்பந்தத்தை(contract ) நிறுத்தக்கூடாது. ஆனால் article 80-ல் குறிப்பிட்ட பட்டுள்ள காரணங்களுக்காக எந்த வித முன் அறிவிப்புமின்றி ஒப்பந்தத்தை நிறுத்தி பணி நீக்கம் செய்யலாம்.

எந்த ,எந்த காரணங்களுக்காக முன் அறிவிப்பு மற்றும் இழப்பீடு வழங்காமல் ஒப்பந்தத்தை நிறுத்தாலம் என்று தொழிலாளர் விதி Article 80-ல் குறிப்பிட்ட பட்டுள்ள என்று காணலாம் :

1.தொழிலாளி, வேலையின் போது,அல்லது வேறு காரணத்தினால் முதலாளி அல்லது பொறுப்பாளர் மேலாளர் அல்லது அவரது மேலதிகாரிகளில் யாரையும் தாக்கினால்.

2 முதலாளியால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள்..வேலை ஒப்பந்தத்தில் இருந்து தனது முக்கியக் கடமைகளைச் செய்யத் தவறினால்,அல்லது சட்டப்பூர்வ உத்தரவுகளுக்கு, கீழ்ப்படியத் தவறினால், பணியின் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை அவர் வேண்டுமென்றே கவனிக்கத் தவறினால்,

3.தொழிலாளியின் தவறான நடத்தை அல்லது நேர்மை அல்லது நேர்மையை மீறும் செயலைச் செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டால்,

4. முதலாளிக்கு பொருள் இழப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொழிலாளி வேண்டுமென்றே ஏதேனும் செயலைச் செய்தாலோ அல்லது விடுவித்தாலோ அந்தச் சம்பவத்தைப் பற்றி அறிந்த பிறகு 24 மணி நேரத்திற்குள் அந்தச் சம்பவத்தை முதலாளி தகுதிவாய்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்தல்,

5.தொழிலாளி வேலையைப் பெறுவதற்கு மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால்.

6.தொழிலாளி தகுதியை கண்டுஅறியும் சோதனைக் காலத்தில் (probation period),

7.. ஒரு ஒப்பந்த வருடத்தில் 30 நாட்களுக்கு அல்லது 15 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக ,சரியான காரணமின்றி தொழிலாளி வரவில்லை என்றால் முதலாளி தொழிலாளரை பணிநீக்கம் செய்யலாம். இதன் படி 30 நாட்களுக்கு 20 நாட்கள் முன் அறிவிப்பு நோட்டீசும் மற்றும் 15 நாட்களுக்கு 10 நாட்கள் முன் அறிவிப்பு நோட்டீசும் முதலாளியால் வழங்கபடும் போது,

8. தொழிலாளி சட்டத்திற்குப் புறம்பாக தனது பதவியை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டால்.

9. தொழிலாளி வர்த்தக ரகசியங்களை வெளிப்படுத்தியதாக நிறுபிக்கப்பட்டால் முதலாளி, தொழிலாளிக்கு முன்கூட்டியே அறிவிப்பு அல்லது இழப்பீடு வழங்காமல் ஒப்பந்தத்தை நிறுத்தலாம்.

ஒரு தொழிலாளி தனது சட்டப்பூர்வ உரிமைகளான article 81 அளிக்கப்பட்ட விதியை பின்பற்றி எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் தனது வேலையை விட்டு வெளியேறலாம்.

எந்த, எந்த காரணங்களுக்காக முன்னறிவிப்பு இன்றி வேலையை விட்டு வெளியேறலாம்.என்று Article 81 கூறப்பட்டுள்ளது என்று காணலாம் .

1.தொழிலாளிக்கு தனது ஒப்பந்தம் சார்ந்த அல்லது (சட்டத்தால் எழும், தீர்மானிக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்படும் கடமை)சட்டப்பூர்வ கடமைகளை முதலாளி நிறைவேற்றத் தவறினால்,

2.பணிச்சூழல் மற்றும் தொழிலாளியின் பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனை அம்சங்கள் போன்ற சூழ்நிலைகளில் முதலாளியோ அல்லது அவரது பிரதிநிதி மோசடி செய்து இருந்தால்

3.தொழிலாளியின் அனுமதியின்றி, ஒப்புக்கொண்ட பணியிலிருந்து அடிப்படையில் வேறுபட்ட வேலையைச் செய்யுமாறு வலியுறுத்துதல் மற்றும் தொழிலாளர் சட்டத்தின் பிரிவான article -60-ன் விதிகளை மீறுதல்.

4.தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது,முதலாளியோ அல்லது, அவரது குடும்ப உறுப்பினரோ அல்லது பொறுப்பு மேலாளரோ வன்முறைத் தாக்குதல் அல்லது ஒழுக்கக்கேடான செயலைச் செய்து இருந்தால்,

5.முதலாளி அல்லது மேலாளரின் நடத்தை கொடுமை, அநீதி அல்லது அவமதிப்பு ஆகியவற்றால் தொழிலாளி பாதிக்கப்பட்டு இருந்தால்,

6.பணியிடத்தில் தொழிலாளியின் பாதுகாப்பு அல்லது ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் தீவிர ஆபத்து இருந்து,முதலாளி அதை பற்றி அறிந்திருந்தும், அதை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கமால் இருந்தால்,

7. முதலாளி அல்லது அவரது பிரதிநிதி, அவரது செயல்கள் மற்றும் குறிப்பாக தகுதியற்ற விதத்தில் மோசமாக நடத்துதல் மற்றும் ஒப்பந்த குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை மீறுதல்.

இவற்றில் ஏதேனும் ஒரு சூழ்நிலைகளில் தொழிலாளி பாதிக்கப்பட்டு இருந்தால் முன் அறிவிப்பின்றி பணியை விட்டு வெளியேறலாம். .என்று article 81 கூறப்பட்டுள்ளது

தொழிலாளரின் நோய்வாய்ப்பட்ட விடுப்பு பற்றி விளக்குகிறது article 82.

Article 82.-ல் அளிக்கப்படுள்ள விதியை காணலாம்

முதலாளி,தொழிலாரின் (contract)ஒப்பந்தம் முடிவதற்கு முன், நோய் காரணமாக அவரது வேலை நிறுத்தம் செய்ய கூடாது. இந்த சட்டத்தில் மூலம் வழங்கப்பட்டுள்ள நோய்வாய்ப்பட்ட விடுப்பை தனது வருடாந்திர விடுப்புடன் இணைக்குமாறு கோருவதற்கு தொழிலாளிக்கு உரிமை உண்டு.

முதலாளியின் நியாயமான நலன்களைப் பாதுகாத்தல் தொடர்பாக ,தொழிலாளி தனது கடமைகளை மீறினால் முதலாளியின் வழக்கு பற்றி விளக்குகிறது Article 83.

artical 83. தரப்பட்டுள்ள விதிகளை காண்போம்

1.தொழிலாளிக்கு ஒதுக்கப்பட்ட வேலை, முதலாளியின் வாடிக்கையாளர்களுடன் பழகுவதற்கு அவரை அனுமதித்தால், ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் முதலாளியின் நியாயமான நலன்களைப் பாதுகாத்தலுக்காக ஒப்பந்தம் முடிவடைந்தவுடன்(contract close) தொழிலாளி அவருடன் போட்டியிட வேண்டாம் ,(எ:கா வேரு ஒரு முதலாளிக்காக அவ்வாடிக்கையாளரை பயன்படுத்துதல்) இந்த இடம் மற்றும் வேலையின் வகை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க நிபந்தனை செல்லுபடியாகும் வகையில், அது எழுத்து மற்றும் குறிப்பிட்ட, நேரம், வேண்டும்.அத்தகைய நிபந்தனை இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை நிறுத்திய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2.தொழிலாளிக்கு ஒதுக்கப்பட்ட வேலையில் முதலாளியின் வணிக ரகசியங்களை அணுக அனுமதித்திருத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டவுடன் முதலாளியின் நியாயமான நலன்களின் பாதுகாப்பிற்காக, அத்தகைய இரகசியங்களை வெளியிடக்கூடாது,இந்த நிபந்தனை செல்லுபடியாகும் வகையில், அது எழுத்து மற்றும் குறிப்பிட்ட, நேரம், இடம் மற்றும் வேலை வகை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

3. இந்தச் சட்டத்தின் விதிகளுக்கு விதிவிலக்காக, கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் முதலாளி ஒரு வழக்கைத் தாக்கல் செய்யலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!