வீட்டுப் பணியாளர்களுக்கான காப்பீடு புதிய தொழிலாளர் ஒப்பந்தங்களுக்கு மட்டுமே என்றும், வீட்டுப் பணியாளர் ஒப்பந்தங்களுக்கான காப்பீட்டுச் சேவை கட்டாயமில்லை என்றும் MUSANED தளம் வெளிப்படுத்தியது.
தொழிலாளர் ஒப்பந்தத்தை முடிக்கும் நேரத்தில் காப்பீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் வீட்டுப் பணியாளர்கள் சவூதிக்கு வந்த பிறகு காப்பீடு செய்ய முடியாது எனவும், தொழிலாளியின் தொழில், மாத ஊதியம், குடியுரிமை, வயது மற்றும் ஒப்பந்தச் செலவு போன்ற பல காரணிகளின் அடிப்படையில் காப்பீட்டுச் செலவு மாறுபடும் என்றும் MUSANED தளம் விளக்கியது.
வீட்டுப் பணியாளரின் வருகைக்குப் பிறகு காப்பீட்டுக் கொள்கையை ரத்து செய்ய முதலாளி விரும்பினால், அவர் காப்பீட்டு நிறுவனங்களின் ரத்து கொள்கையின்படி நேரடியாகக் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.
மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், வீட்டுச் சேவைகள் மற்றும் வீட்டு வேலைத் திட்டங்களுக்காகவும், வீட்டு வேலை செய்பவர், முதலாளியின் உரிமைகள் மற்றும் கடமைகளை வெளிப்படுத்தவும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமாக MUSANED தளத்தை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.