ஒரு குடும்பத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டு உதவியாளர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு பொருந்தும் வகையில் வீட்டுப் பணியாளர்களுக்கான சுகாதார காப்பீட்டு விதிகளைப் பயன்படுத்த சவுதி அரேபியாவின் அமைச்சர்கள் கவுன்சில் கடந்த செவ்வாயன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஜித்தாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் நடைபெற்ற இந்த அமர்வுக்கு இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் தலைமை வகித்து, மேலும் வரும் வெள்ளிக்கிழமை அன்று சவூதி நடத்தும் உச்சிமாநாட்டின் 32வது கூட்டத்தில் பங்கேற்க வரும் அரபு லீக் கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் தலைவர்களை வரவேற்றார்.
சூடானும் அதன் சகோதர மக்களும் பாதுகாப்பும் அமைதியும் அனுபவிக்கும் வரையில் அமைச்சகம் தன் முயற்சிகளைத் தொடரும் என உறுதிப்பாட்டை அமைச்சரவை அறிவித்தது, மேலும் ஊடகத்துறை அமைச்சர் சல்மான் அல்-தோசாரி , பல்வேறு நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு சவூதி ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் நிகழ்ச்சி நிரலில் பல முடிவுகள் வெளியிடப்பட்டது.நிதித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த சவூதி அரேபியாவின் நிதி அமைச்சகம் மற்றும் துருக்கியின் நிதி மற்றும் கருவூல அமைச்சகத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அதிகாரம் அளித்துள்ளது.
வர்த்தக அமைச்சகத்திடம் இருந்து ஆசிரியர் மற்றும் கல்வி ஆலோசனைத் தொழிலுக்கான உரிமம் வழங்கும் அதிகாரத்தை கல்வி அமைச்சகத்துக்கு மாற்றி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.